மும்பையில் சோகம்: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்து 3 பேர் உடல் கருகி பலி
மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் கோரேகான் மேற்கு பகுதியில் ராஜாராம் தெருவில் பகத்சிங் நகர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணியளவில் வீடு ஒன்றில் அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியுள்ளது. அந்த தீயானது மளமளவென தரை தளம் மற்றும் மாடிக்கும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில், தரை தளத்தில் படுத்திருந்த 2 ஆண்களும், மாடியில் இருந்த ஒரு பெண்ணும் சிக்கி கொண்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் மக்கள் வாளிகளில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீயில் உடல் கருகி 3 பேரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள் ஹர்ஷதா பவாஸ்கர் (வயது 19), குஷால் பவாஸ்கர் (வயது 12), சஞ்சோக் பவாஸ்கர் (வயது 48) என அடையாளம் காணப்பட்டனர். நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலியானது அந்த பகுதியினரிடையே பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
