ஒரு சிறிய விசயம்... இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய அறிவுரை
புதுடெல்லி, டெல்லியில் வளர்ச்சிக்கான பாரதத்தின் இளம் தலைவர்களுக்கான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தினரிடையே பேசும்போது, என்னுடைய வேலைக்கான களம், என்னுடைய அனுபவம் வேறுபட்டது. எனக்கும் இளைஞர்களுக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் உள்ளது. நீங்கள் என்னை விட 60 வயது இளமையானவர்கள். அதனால், நான் இதில் பங்கேற்க வரவா? வேண்டாமா? என சிறிது குழப்பம் ஏற்பட்டது. நான் சுதந்திர இந்தியாவில் பிறந்தவன் அல்ல. சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த இந்தியாவில் பிறந்தவன். என்னுடைய இளமை காலங்கள் ஓடி விட்டன. இன்று எவ்வளவோ மாறி விட்டன என்றார். தொடர்ந்து அவர், ஆனால் ஒரு விசயம் பொதுவாக தொடர்ந்து உள்ளது. ஒரு சிறிய விசயம்... வாழ்க்கையில் உங்களுடைய இடம் என்ன என்று அது தீர்மானிக்கிறது. அதுதான், முடிவு எடுக்கும் திறன். ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவரும் முடிவு எடுக்கிறீர்கள். சிறிதோ, பெரிதோ, வளர வளர நீங்கள் ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தே ஆக வேண்டும். இந்தியா வளர்ச்சி அடையும். அது நிச்சயம். யாரும் இயக்காமல், தானாகவே வளர்ச்சி அடையும் வகையில் இந்த நாட்டை ஓரிடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றிருக்கிறார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நிலைக்கு இந்தியா உருமாறும் என பேசியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
