நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமருக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
பாட்னா, பீகாரில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியானார். இந்நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான கே.சி. தியாகி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார். நீண்டகாலம் முதல்-மந்திரியாக சேவையாற்றி வரும் அவர், பீகார் அரசியல் மட்டுமின்றி தேசிய அளவில் பொது வாழ்வில், அரசாட்சிக்கு புதிய வழிகாட்டலை ஏற்படுத்தி தந்து, சமூகத்தில் சமத்துவம் ஏற்படுத்தியவர் என புகழ்ந்து கூறியுள்ளார். சமூக நீதி, நல்ல நிர்வாகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என தொடர்ச்சியாக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர் தேசிய அங்கீகாரம் பெற தகுதி படைத்தவர். பலர் வாழ்நாளிலேயே இந்த கவுரவம் பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சார்பாக, நிதிஷ் குமாருக்கு இந்த கவுரவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதனால், வரலாறு நீண்டகாலம் உங்களை பாராட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
