"ரவிக்காக மட்டும்தான் இந்த படம் ஓடும்"- 'பராசக்தி' பார்த்தபின் கெனிஷா பேட்டி
சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் ரவிமோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தபடத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று வெளியான பராசக்தி படத்தை காண பாடகி கெனிஷா நடிகர் ரவிமோகனுடன் சென்னை வடபழனியில் உள்ள காசி தியேட்டருக்கு சென்றுள்ளார். ‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்து திரையரங்கில் இருந்து வெளியே வந்த நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷா, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேறு யாருமே தெரியவில்லை. அவருக்காகவே இந்த படம் எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்தால் என்ன, வில்லனாக நடித்தால் என்ன… இந்த படத்தில் நம்பர் 1 அவர் தான். இரண்டாம் பாதியில் அவரைத் தவிர படமே இல்லை. ரவி எப்போதுமே எவர்கிரீன், எப்போதுமே எவர் பெஸ்ட்,” என்றார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து பேசிய கெனிஷா, “விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் உண்மையான பொங்கல்,” என்று தெரிவித்துள்ளார். கெனிஷாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
