மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி
நவிமும்பை,5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சஞ்சனா 45 ரன்கள், நிகோலா கேரி 40 ரன்களும் எடுத்தனர்.பெங்களூரு அணியில் அபாரமாக பந்துவீசிய நடைன் டி கிளெர்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி விளையாடியது.பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 25 ரன்னிலும், ஹேமலதா 7 ரன்னிலும், ராதா யாதவ் ஒரு ரன்னிலும் , ரிச்சா கோஷ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், 6-வது வரிசையில் களம் கண்ட நடினே டி கிளார்க் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது. நாட் சிவெர் அந்த ஓவரை வீசினார். முதல் 2 பந்துகளில் ரன் வரவில்லை. 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும், 5-வது பந்தில் சிக்சரும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசிய நடினே டி கிளார்க் அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நடினே டி கிளார்க் 63 ரன்கள் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரே ஆட்டநாயகி விருது பெற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
