16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி உள்பட 2 பேர் கைது
கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று தனது காதலனுடன் அப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி அங்கு வந்துள்ளார். சிறுமியின் காதலனும், திபன்கரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் வைத்து சிறுமியை அவரது காதலனும், திபன்கரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர், சிறுமியின் காதலனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
