"தேசிய இளையோர் திருவிழா": டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினார் எல். முருகன்
புதுடெல்லி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கிலான சீரிய பணிகளோடு நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவ்விதம், உலகிலேயே மிகப்பெரும் இளைஞர் சக்தி கொண்ட நமது தேசத்தை, வளர்ச்சி மிக்கதாய் கட்டமைக்கும் வல்லமை இளைய சமுதாயத்தினரிடமே உள்ளது என்பதால், அவர்களுக்கான "தேசிய இளையோர் திருவிழா" டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வளர்ச்சியடைந்த பாரதத்தில் இளைய தலைவர்கள்' என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இருந்து டெல்லி வந்துள்ள இளைஞர்களை, எனது இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மேலும், தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், அவர்களோடு இணைந்து இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கிலான சீரிய பணிகளோடு நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவ்விதம், உலகிலேயே மிகப்பெரும் இளைஞர் சக்தி கொண்ட நமது தேசத்தை, வளர்ச்சி… pic.twitter.com/cI8ZPP3lN2




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
