வங்காளதேச வன்முறை: மதச்சார்பின்மை ஆதரவாளர்களிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை - யோகி ஆதித்யநாத்
லக்னோ,வங்காளதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெரீப் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக வங்காளதேசத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்தினருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, அந்நாட்டில் இந்து மதத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற ராமசந்திர மகாராஜாவின் 726வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, மதச்சார்பின்மை ஆதரவாளர்களாக கூறிக்கொள்பவர்களிடமிருந்து வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. யாரோ அவர்கள் வாயை பசை போட்டு ஒட்டிவிட்டனர் போல தோன்றுகிறது. வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக மதச்சார்பின்மை ஆதரவாளர்களாக கூறிக்கொள்பவர்கள் ஒரு மெழுகுவர்த்தி பேரணி கூட செல்லவில்லை. இவையெல்லாம் நமக்கு ஒரு எச்சரிக்கை. நமது புனித சமூகம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுகிறது’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
