பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை: ரேகா குப்தா
புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய 11 மாத கடந்த கால அரசின் சாதனைகளை ஒரு விரிவான அறிக்கையாக சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது, இதற்கு முன் நடந்த 11 வருட ஆம் ஆத்மியின் தோல்விகள், தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றையும் வெளிப்படுத்தினார். அவர் சட்டசபையில் பேசும்போது, பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைக்கிறார் என்ற உண்மை சிலருக்கு பிடிக்கவில்லை. சில சமயங்களில் அவர்கள் அவமதிப்பு செய்கின்றனர். சில சில சமயங்களில் அவர்கள் மலிவான விமர்சனங்களை வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என கூறினார். நான் தற்செயலாக பேச கூடிய வார்த்தைகளை வைத்து கொண்டு கேலி செய்கின்றனர். பேசும்போது யார் வேண்டுமென்றாலும் தவறுகளை செய்யலாம். சில வார்த்தைகளை தவறாக உச்சரிக்கலாம். நான் ஒரு தவறு செய்தேன். ஆனால், நீங்களோ உள்நோக்கத்துடன் தெரிந்தே செய்கிறீர்கள் என குற்றச்சாட்டாக கூறினார். டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, துணை நிலை கவர்னர், மாநகராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றும் அப்போது அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
