'பராசக்தி' திரைப்படம் இன்று வெளியாகிறது: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. காலை 9 மணிக்கு பராசக்தி வெளியாக உள்ளது. , 25 மாற்றங்களுடன் ’பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A 16+ சான்றிதழ் அளித்துள்ளது. அதன்படி, ’தீ பரவட்டும்’ என்ற காட்சி ’நீதி பரவட்டும்’ எனவும், ‘ஹிந்தி அரக்கி’ என்பதற்கு பதிலாக ‘அரக்கி’ எனவும், 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வசனம், ’என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், டிக்கெட் விற்பனை உடனடியாக தொடங்கியது. விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பராசக்தி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
