திரையரங்குகளில் வெளியானது ‘பராசக்தி’.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு 25 மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டு, U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, ‘தீ பரவட்டும்’ என்ற காட்சி ‘நீதி பரவட்டும்’ எனவும், ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ எனவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியது. தமிழக முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோக்கள் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
