‘1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் எனக்கு நன்றி கூறினார்’ - டிரம்ப் மீண்டும் பேச்சு
வாஷிங்டன், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;- “பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். போர்களை தடுத்து நிறுத்தியது குறித்து நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம், போரை வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வரலாற்றில் நோபல் பரிசை பெறுவதற்கு என்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என நினைக்கிறேன். மக்களுக்கு என்னை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி. நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். அவற்றில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தன. இந்தியா-பாகிஸ்தான் போல் சில போர்கள் சமீபத்தில் தொடங்கின. அந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நான் அவசர உத்தரவுகள் மூலம் போரை நிறுத்தினேன். கோடிக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றினேன்.” இவ்வாறு அவர் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
