விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி.
கோபன்ஹேகன், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. வெனிசுலாவில் அத்துமீறி அமெரிக்கா நடந்து கொண்டதற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. ரஷியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன. கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் எடுத்து கொள்ளப்படும் என டிரம்ப் பேசி வருவதும் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் டென்மார்க்கில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. ராஸ்மஸ் ஜர்லோவ் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கா எங்கள் மீது ராணுவ வீரர்களை கொண்டு மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஆழ்ந்த வேதனை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்தது தவிர உங்களுக்கு எதிராக வேறெதுவும் செய்யாத நாடுகளை, கூட்டணி நாடுகளை நீங்கள் மிரட்டுவீர்கள் என்பது அதிர்ச்சி தருகிறது. நினைத்து பார்க்க முடியாதது என அமெரிக்காவின் அச்சுறுத்தலை குறிப்பிட்டு கூறினார். இது பிற நாடுகளுக்கும் கூட வருத்தம் ஏற்படுத்தும். ஏனெனில், டென்மார்க் மீது இதுபோன்று படைகள் கொண்டு மிரட்டல் விடப்படும் என்றால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது என கூறினார். இதேபோன்று கிரீன்லாந்து பற்றி குறிப்பிட்ட அவர் அந்நாட்டுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. ஒரே அச்சுறுத்தல் அமெரிக்காதான். சீனா மிரட்டி வருகிறது என்பது எல்லாம் பொய்யான புனைவுகள். சீனாவின் தூதரகமோ, சுரங்க பணிகளோ, ராணுவ வீரர்களோ கிரீன்லாந்தில் இல்லை என கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
