’மிகவும் எதிர்பாராதது’...’ஜன நாயகன்’ வெளியாகாதது பற்றி பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை,நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் நாளை வெளியாக உள்ளது. இது அவரது 25வது படம் என்பதால் இது அவருக்கு ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது. அதே சமயம், இன்று விஜய்யின் ' ஜன நாயகன்' படம் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டநிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சிவகார்த்திகேயன் பத்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜன நாயகன் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது , அதற்கு அவர் கூறுகையில், "இது மிகவும் எதிர்பாராதது. படம் தள்ளிப்போகும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கடந்த 15 நாட்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துள்ளன. நான் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. இந்த திரையுலகில் அனைவருக்கும் இடம் உள்ளது. நான் போட்டியிட விரும்பினால், ஒரு தடகள வீரராகவோ அல்லது குத்துச்சண்டை வீரராகவோ மாறியிருப்பேன்" என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
