’தி ராஜா சாப்’ படம் பார்க்க முதலையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்...பரபரப்பு சம்பவம்
சென்னை,நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கும் படம் 'தி ராஜா சாப்'. இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்னதாக நேற்று இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெற்றன. அப்போது நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் பார்க்க வந்த பிரபாஸ் ரசிகர்களில் சிலர், குட்டி முதலையை கையில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தனர். இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக விசாரிக்கப்பட்ட நிலையில், அவை உண்மையான முதலையல்ல, ரப்பர் மூலம் செய்யப்பட்ட டம்மி முதலையென தெரிய வந்தது. தி ராஜா சாப்' படத்தின் டிரெய்லரில், பிரபாஸ் முதலையுடன் மோதும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்து, ரசிகர்கள் முதலை பொம்மையை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்ததாக கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
