வங்காளதேச முன்னாள் பிரதமர்: அமெரிக்க நகர தெருவுக்கு கலிதா ஜியா பெயர்
மிக்சிகன், வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார். இவர் வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர். இந்தநிலையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள ஜோசப் காம்பாவ் மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு இடையிலான சாலையின் ஒரு பகுதிக்கு கலிதா ஜியாவின் பெயரைச்சூட்டும் திட்டம் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த நகர சபை கவுன்சிலில் தற்போது வங்காளதேச வம்சா வளியைச் சேர்ந்த 4 பேர் உள்ளனர். அவர்களின் தீவிர முயற்சியால் அந்த தெருவுக்கு கலிதா ஜியா பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஹாம்ட்ராம்க் நகரம் அமெரிக்காவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முதல் நகரமாக உள்ளது. கடந்த 2013-ஆண்டு முஸ்லிம் பெரும் பான்மை நகரமாக மாறிய இந்நகரம் 2022-ஆண்டு அனைத்து முஸ்லிம்களையும் கொண்ட நகர சபையைக் கொண்ட முதல் அமெரிக்க நகரம் ஆனது. இந்த நகரத்தின் மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளி நாட்டில் பிறந்தவர்கள். மேயர் மற்றும் முழு நகர சபை உட்பட அதன் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.இதேபோல் ஏற்கனவே, சிகாகோவில் ஒரு சாலைக்கு மறைந்த வங்க தேச ஜனாதிபதியும் கலிதா வின் கணவருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயர் சூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
