இலங்கை அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை: கிழக்கு மாகாண மக்களுக்கு வானிலை எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் நாட்டின் கிழக்கு மாகாண பகுதிகளில் மின்தடை ஏற்படாலம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒட்டிய வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று முதல்(08.01.26) எதிர்வரும் (10.01.26) வரை பலத்த காற்றும் கனமழையும் பெய்ய கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட கூட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்தடை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும் இந்த இடர்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தயார் நிலையில் இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.வளிமண்டல திணைக்கள எதிர்வு கூறலின் அமைவாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்று தொடக்கம் 10.01.2026 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 100 மி.மீ க்கும் அதிக ஆன மழை பொழிவு இருக்கக்கூடும், மேலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கி.மீ வரை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இடையிடையே மின் தடை படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகிறது. மேலும் இதனை கருத்தில் கொண்டு தயார்ப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்வதாகவும், அடுத்தடுத்து வரும் வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறும் தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
