நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்தியா அணிக்கு பின்னடைவு
மும்பை,நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி தொடங்குகிறது. அதேபோல், டி20 தொடர் 21ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் திலக் வர்மா இடம்பெற்றிருந்தார். இதனிடையே, விஜய் ஹசாரே தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சிகிச்சைக்குப்பின் ஐதராபாத் சென்றுள்ள திலக் வர்மா ஓய்வில் இருப்பதாகவும், ஓய்வு முடிந்து மீண்டும் பயிற்சிக்கு வந்தப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா பங்கேற்காததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
