பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
வாஷிங்டன்,நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம் என்றால், அதன் அளவை நீங்களே யோசித்துப்பாருங்கள். இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர் ஆகும். இந்த கோளின் நகர்வை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பிரம்மாண்ட கோள் தான் பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "வியாழன் கோளானது பூமியை நோக்கி நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) அதனை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் ஜெமினி விண்மீன் கூட்டத்துக்கு அருகில் இந்த கோளை காணலாம். அதேபோல் நாளை (சனிக்கிழமை) சூரியன், வியாழன், பூமி ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் காணப்படும்" என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
