இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படுகிறதா? மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்,இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். மேலும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இதுதொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
