இலங்கையில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சி வீடியோ - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சி வீடியோ  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏரியில் சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்ற போது பலத்த காற்றின் காரணமாக விமானம் ஏரியில் மோதி விபத்துக்குள்ளானது.A seaplane crashed into Gregory Lake in Nuwara Eliya, Wednesday, while landing to pick a group of tourists.The pilot and co-pilot who were onboard, sustained injuries and were admitted to hospital.#SriLanka #NuwaraEliya #seaplane #news pic.twitter.com/kfVS5k1gDEஇந்த விபத்தில் விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி இருவரும் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, விபத்தின் போது சுற்றுலா பயணிகள் யாரும் விமானத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான விபத்து குறித்து இலங்கை நாட்டு பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அத்துடன் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை