அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..இன்றைய நிலவரம் என்ன?
சென்னை, 2025-ம் ஆண்டில், தங்கத்தின் விலை ஏற்றம் அசாத்தியமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இது நகை மற்றும் முதலீட்டு பொருட்களில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது. நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் விலை 99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2-ந் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும், - ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும் விற்பனை செய்யப்பட்டது,தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 760-க்கும், சவரன் விலை ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. இதை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 12 ஆயிரத்து 830-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.வெள்ளி விலையும் நேற்று முன் தினம் அதிகரித்தது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.266-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் ஆகவும் இருந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.271-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 71 `ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு இந்தநிலையில் இன்று, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்வு வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
