காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை...!
சென்னை, தங்கத்தின் விலை நாளுக்குநாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தை கடந்தது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுத்தந்தது. அதேவேளை நகை வாங்கும் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனிடையே, சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், காலை அதிகரித்த தங்கம் விலை மாலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 12, 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2,77,000க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமிற்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.277க்கு விற்பனை செய்யப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
