மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை..!
பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பாகலூரில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணா, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே உடல் நல பாதிப்புடன் இருந்தது. இதற்காக முனிகிருஷ்ணா, சத்யா பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மாதம்(டிசம்பர்) 22-ந் தேதி குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்தது. இதைப்பார்த்து சத்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தையை அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரியில் சத்யா அனுமதித்தார். அங்கு குழந்தையின் உடல் நிலை ஆபத்தாக இருப்பதால் இந்திராகாந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி சத்யாவிடம் கூறினார்கள். அதன்படி, இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சத்யாவிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி குடும்பத்தினரிடம் அவர் விசாரித்தார். அப்போது முனிகிருஷ்ணா தான் குழந்தைக்கு விஷத்தை கொடுத்தது சத்யாவுக்கு தெரியவந்தது. குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அதற்காக கடன் வாங்கி முனிகிருஷ்ணா மருத்துவ செலவு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது 50 மில்லி விஷத்தை வாங்கியுள்ளார். அந்த விஷத்தை தனது குழந்தைக்கு முனிகிருஷ்ணா கொடுத்துள்ளார். அதனால் குழந்தை உயிருக்கு போராடி வருவது தெரியவந்துள்ளது. இதுபற்றி சித்தாப்புரா போலீசில் கணவர் மீது சத்யா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிகிருஷ்ணாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
