லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை

  தினத்தந்தி
லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை

புதுடெல்லி,ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ஐ.ஆர்.சி.டி.சி.க்கு சொந்தமான ஓட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு அதிகாரிகள் மீதும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும் லாலு பிரசாத் யாதவ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுவர்ண கந்த சர்மா, தற்போதைய நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தார்.அத்துடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை