பயணிகள் கவனத்திற்கு… ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்
ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் கடந்த 4-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நேரம் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதில் எந்த வித மாற்றங்களும் இல்லை




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
