ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை உச்சம் சென்று, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனையானது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.266-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
