யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: குப்பை கிடங்கில் தீ வைத்து அழிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: குப்பை கிடங்கில் தீ வைத்து அழிப்பு  லங்காசிறி நியூஸ்

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவு நடவடிக்கைக்கு கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கிட்டத்தட்ட 600 கிலோ வரையிலான கஞ்சா பொருட்கள் பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட வெலிக்கண்டி குப்பை கிடங்கில் வைத்து தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை