ரஷிய எண்ணெய் விவகாரத்தில் உதவாவிட்டால்... இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்,ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலன் கருதியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்த ஒரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என இந்தியா கூறி வருகிறது. ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதத்திற்கும் மேல் டிரம்ப் வரி விதித்துள்ளார். இந்த நிலையில், ரஷியா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “ ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம். இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம்” என்றார்.




வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்தார் விஜய்
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளை மோசடி செய்யும் திமுக அரசு - அண்ணாமலை தாக்கு
பொங்கல் எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயரும் மல்லிகை பூ விலை.!
கோவையில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு - காரணம் என்ன.?
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
