வழி கேட்பது போல் நடித்து பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிக்கபனவரா பகுதியில் மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண் டாக்டர், பணி முடிந்து இரவில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் விடுதியின் வாசல் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெண் டாக்டரிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார். அவரை தவிர்த்துவிட்டு பெண் டாக்டர் விடுதியின் வெளிக்கதவை திறக்க முற்பட்டபோது, அந்த வாலிபர் பெண் டாக்டரை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் கூச்சலிடவே, இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் இது குறித்து பெண் டாக்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் துமகுரு பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
