வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு சசி தரூர் கண்டனம்
கொல்கத்தா,2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும்இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.இந்த நிலையில், வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஒருவேளை வங்காளதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்? விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்தார் விஜய்
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளை மோசடி செய்யும் திமுக அரசு - அண்ணாமலை தாக்கு
பொங்கல் எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயரும் மல்லிகை பூ விலை.!
கோவையில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு - காரணம் என்ன.?
