தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாயை எட்டிய நிலையில், கடந்த டிசம்பர் 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ச்சியாக தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.256-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
