இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய சாதனை: 3,625 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி - லங்காசிறி நியூஸ்
2025ம் ஆண்டில் அதிகப்படியான மருந்து உற்பத்தியை செய்து இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் சாதனை படைத்து இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து இருப்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக மேற்கொள்ளப்படும் மாத்திரை உற்பத்தியை மார்ச் மாதத்திலேயே அடைந்து விட்டதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 385 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், வரலாற்றில் முதல் முறையாக மருந்து வழங்கல் பிரிவினரால் வழங்கப்பட்ட முன்பதிவு இலக்குகளை எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளது. அத்துடன் புதிதாக 5 மாத்திரைகளை சந்தைப்படுத்தவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாத்திரை உற்பத்தி சாதனையால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு மொத்த வருமானமாக 27.06 பில்லியன் ரூபாய் பதிவாகி இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
