கொழும்வில் திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கொழும்வில் திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் கொழும்பில் நேற்றிரவு நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (01/01/26) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது 3 ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக  பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்ற இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

மூலக்கதை