2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? - லங்காசிறி நியூஸ்
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் புதிய வரி நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. 2026 புத்தாண்டு முதல் இலங்கையில் சூதாட்ட விடுதிகள் (Casino) மற்றும் பந்தய வியாபாரங்களுக்கான அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.(ஜனவரி 01ம் திகதி முதல் புதிய வரி விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதற்கான நுழைவுக் கட்டணம் இதுவரை 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், தற்போது 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கைப் பிரஜைகள் எவரேனும் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, குறித்த நிறுவனத்தினர் தலா 100 டொலர் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாயை நுழைவுக் கட்டணமாக அறவிட வேண்டும். பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் செலுத்தி வந்த 15 சதவீத வரி, தற்போது 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதாந்தம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வருமானத்தை ஈட்டும் பந்தய முகவர்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்களுக்கு இந்த புதிய 18 சதவீத வரி வீதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி முறைமைக்கு அமைவாக செயற்படுமாறு அனைத்து சூதாட்ட விடுதி உரிமையாளர்களுக்கும், பந்தய வியாபார நிறுவனங்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
