புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை,தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்திருந்தது. அதன்படி, தங்கம் கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பின்னர் சற்று விலை குறைந்து மீண்டும் 22-ந்தேதிக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் எகிறியது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற விலையிலும், அதேநாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற விலையிலும் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது. மேலும் விலை அதிகரித்துவிடுமோ? என அச்சம் கொண்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. கடந்த 29-ந்தேதியில் இருந்து தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், 2026 ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம், குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.256-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிக இறக்கம்தான் என்றும், இனிவரும் நாட்களிலும் இப்படி ஏற்ற, இறக்கம் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
