தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?
சென்னை,2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம், வெள்ளி விலை அதிக ஏற்றத்தை கண்டுவந்து, அவ்வப்போது புதிய உச்சத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையானது மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் விற்பனையனது. இன்றைய தங்கம் விலை:- இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை:- வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளியின் விலை போட்டிப்போட்டு உயர்ந்து கொண்டு வந்த நிலையில், விலை குறைந்து வருவது நகை பிரியர்கள், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
