தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?
சென்னை,தங்கம் விலை2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம், வெள்ளி விலை அதிக ஏற்றத்தை கண்டுவந்து, அவ்வப்போது புதிய உச்சத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையானது மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.99,040-க்கு விற்கப்பட்டது. 20-ந்தேதி தங்கம் விலை ரூ.99,200 ஆக உயர்ந்தது. 22-ந்தேதி மேலும் அதிகரித்து ரூ.1,00,560-க்கு விற்கப்பட்டது. 23-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனையானது. 24-ந்தேதி பவுன் விலை ரூ.1,02,400 ஆக உயர்ந்தது. 25-ந்தேதி மேலும் உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்கப்பட்டது. 26-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1,03,120 ஆக அதிகரித்தது. நேற்று முன் தினம் தங்கம் விலை பவுன் ரூ.1,04,000-க்கு உயர்ந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால், விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய வெள்ளி விலை தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து 2,76,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து 276க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
