இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள்: 16 ஆண்டுகளுக்கு பின் மக்களுக்கு விடுவிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள்: 16 ஆண்டுகளுக்கு பின் மக்களுக்கு விடுவிப்பு  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இருந்த நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில்,  இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலம் 16 ஆண்டுகளுக்குப் பின்  விடுக்கப்பட்டுள்ளன. மக்களின் பயிர்ச்செய்கை மற்றும் மேட்டுநில காணிகளான சுமார் 25 ஏக்கர் நிலம் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.  விடுவிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையில், விடுவிக்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தையும் உரிய மக்களிடம் விரைவாக ஒப்படைக்க துறைந்த அதிகாரிகள் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட நிலங்களை மக்களிடம் விரைவாக ஒப்படைப்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை