ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை,தங்கம், வெள்ளியின் விலை மாறி, மாறி உயர்ந்து வருகிறது. இதில் தங்கம் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.12,820 ஆக அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.245 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000- அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருவதால் நகைப் பிரியர்கள், இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
