கொழும்பில் துப்பாக்கியுடன் சிக்கிய வயோதிபர்: மடக்கி பிடித்த பொலிஸார் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கொழும்பில் துப்பாக்கியுடன் சிக்கிய வயோதிபர்: மடக்கி பிடித்த பொலிஸார்  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் கொழும்பில் ரி - 56 ரக துப்பாக்கியுடன் சுற்றிய வயோதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொழும்பு - கிராண்ட்பாஸ் ஜோசப் வீதி பகுதியில் நேற்று(24.12.2025) கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.அவரிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை