தங்கம், வெள்ளி புதிய உச்சத்தில் விற்பனை...இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.170-ம், பவுனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை எகிறி காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது.நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,44,000க்கு விற்பனை ஆகிறது.தங்கம் கூட இடையில் சில நாட்கள் குறைகிறது. ஆனால் வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
