வரலாறு காணாத புதிய உச்சம்... மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை..!
சென்னை, தங்கம் விலை தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலையில் தங்கம் விலை மேலும் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வரலாறு காணாத புதிய உச்சம் இந்த நிலையில், இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. இதன் மூலம் 15-ந்தேதிக்கு பின் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, வரலாறு காணாத புதிய உச்சமாகும்.வெள்ளி விலை வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. பிற்பகலில் தங்கம் விலை மட்டும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
