இலங்கையில் பொலிஸார் திடீர் சோதனை: பல வெளிநாட்டு பெண்கள் கைது - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் நேற்றிரவு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் பல வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட விடுதியை பொலிஸார் நேற்று திடீரென சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். இந்த சுற்றிவளைப்பு சோதனையில் கொழும்பு தெற்கு பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது விடுதியின் உரிமையாளர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் ஜா-எல பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் இந்த விடுதியின் உரிமையாளராக இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய பெண்கள் 25 முதல் 41 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
