இலங்கை விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது: ரூ.354,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் - லங்காசிறி நியூஸ்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 19ம் திகதியான இன்று அதிகாலை 12.45 மணிக்கு துபாயிலிருந்து ஃப்ளை துபாய் FZ-569 விமானம் மூலம் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். சந்தேகத்திற்குரிய அந்த பெண் விமான நிலையத்தின் கீரின் சேனல் வழியாக வெளியேற முயற்சித்த போது சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து சுமார் 354,000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட பெண் 49 வயதுடைய பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கூடுதல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
