இலங்கையில் மலையக மக்களுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
மழை அதிகரிப்பு காரணமாக இலங்கையின் மலையக மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி இன்று பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.இந்த மண்சரிவுக்கான எச்சரிக்கை கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர, மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மேல் குறிப்பிட்ட பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
