முல்லைத் தீவை சேர்ந்த 16 வயது சிறுவன் மாயம்: காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் கடந்த 29ஆம் திகதி சிறுவன் முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியை சொந்த முகவரியாக கொண்ட காணாமல் போன சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 28.11.2025 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
