ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். தற்போது மலையாளத்தில் உருவாகி உள்ள ‘ரேச்சல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கறி வெட்டும் தொழிலாளியாக படத்தில் நடித்துள்ள ஹனிரோஸ் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பரில் திரைக்கு வெளியாவதாக இருந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் ‘ரேச்சல்’ என்ற படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்துள்ளது. இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், “சரியான நேரம் மற்றும் ஒட்டுமொத்த ரிலீஸ் சூழலைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்வதற்காக ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.A post shared by Honey Rose (@honeyroseinsta)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
