அரியானா: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 4 பேர் பலி
சண்டிகர்,டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியானாவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பயங்கர சாலைவிபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம், வெளிச்சமின்மையால் அரியானாவின் நூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 20க்கும் மேற்பட்ட கார்கள் , பிற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
