மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் யாரும் கோஷம் போடவில்லை: பிரியங்கா காந்தி
புதுடெல்லி,டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்..இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், 'பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், இன்று இல்லையேல் நாளை..' என்று முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. மோடிக்கு எதிராக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி கூறியதாவது:பிரதமர் மோடிக்கு எதிராக அப்படி எந்த முழக்கங்களும் எழுப்பப்படவில்லை. மேடையில் அப்படி யாரும் சொல்லவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் யாரோ ஒருவர் அல்லது காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பிரதமர் மோடியை அப்படி கூறியதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவ்வாறு முழக்கமிட்டது யார் என்று தெரியவில்லை. அப்படி யாரும் கூறியதாகவும் எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி இருக்க இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்ற அவைகள் செயல்பட வேண்டும் என்று பாஜகவினர் நினைப்பதில்லை.நாங்கள் தில்லி காற்று மாசுபாடு குறித்து விவாதம் நடத்தக் கோரி வருகிறோம். ஆனால் அவர்கள் அதைச் செய்ய முன்வரவில்லை" என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
